Advertisment

பீகாரில் நால்வருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு!

white fungus

Advertisment

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோயும்தாக்கிவருகிறது. பொதுவாக நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கும் இந்த நோய், கரோனாவால்பாதிக்கப்பட்டு, அதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும்தாக்குகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இதனையடுத்து மத்திய அரசு, கருப்பு பூஞ்சையை அறிவிக்கப்பட வேண்டியநோயாக அறிவிக்குமாறு மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே கருப்பு பூஞ்சையைஅறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளன.

இந்தநிலையில், பீகாரில் மருத்துவர் உட்பட நால்வருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தற்போது வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு சிலரை தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நான்கு பேருக்கும் கரோனாஅறிகுறிகள் போன்ற அறிகுறிகளே ஏற்பட்டுள்ளது. கரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கருப்பு பூஞ்சை நோயைவிட வெள்ளை பூஞ்சை நோய் அதிக ஆபத்தானது என்றும், இந்த நோய் வேகமாக நுரையீரலைத் தாக்குவதே அதற்கு காரணம் என்றும் கூறியுள்ள மருத்துவர்கள், வெள்ளை பூஞ்சை நோயும், கரோனவைப் போன்றே நுரையீரல்தொற்றை ஏற்படுத்துமென்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், நீண்டகாலமாக ஸ்டெராய்டு எடுத்து வருபவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படலாம் எனவும்தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வெள்ளை பூஞ்சை நோய், கரோனா பாதிக்கப்பட்டவர்களை எளிதில் தாக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Bihar black fungus corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe