Advertisment

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி(95) உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் தனது வழக்கறிஞர் பணியில் இருந்து விலகி ஓய்வில் இருந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ராம் ஜெத்மலானி காலமானார். இவர் ஒருங்கிணைந்த இந்தியா- பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

Advertisment

former union minister, senior supreme court lawyer ram jethmalani passed away delhi

இந்தியா- பாகிஸ்தான் பிரிப்புக்கு பின் மும்பையில் குடியேறி வழக்கறிஞராக பணியாற்றினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர், நகர்ப்புற அமைச்சகராக பணியாற்றினார். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர் ராம்ஜெத் மலானி. அதேபோல் 2ஜி வழக்கில் ஆஜராகி வாதாடினார். இந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களில் ஒருவர் ராம்ஜெத் மலானி. இவர் தான் வாதாடிய அனைத்து வழக்குகளிலும் வெற்றி கண்டார் என்பது அனைவரும் அறிந்தது.

Advertisment
Delhi FORMER UNION MINISTER India passed away ram jethmalani senior lawyer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe