ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிப்பதற்காக, நேற்று முதல் அவரது இல்லத்தில் முகாமிட்டுள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் லுக் அவுட் நோட்டிஸ் ஒட்டினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cbi6.jpg)
இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் உள்ளிடோருடன் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் பிறகு இல்லத்திற்கு விரைந்த ப.சிதம்பரத்தை பின் தொடர்ந்த சிபிஐ அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கியதாகவும், ப.சிதம்பரத்தை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cbi4_0.jpg)
இதனையடுத்து அவரின் இல்லத்தை சுற்றிலும் சிபிஐ அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், டெல்லி காவல்துறை உதவியை சிபிஐ நாடியது. அதனை தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் அதிக அளவில் ப.சிதம்பரம் இல்லத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Follow Us