ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்திடம் 400- க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவரிடம் இன்னும் பல கேள்விகள் கேட்க வேண்டி உள்ளதால் சிபிஐ காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

former union minister p chidambaram custody extend cbi special court order

Advertisment

இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள், ப.சிதம்பரத்துக்கு எதிராக எந்த ஒரு ஆவணமும், ஆதாரமும் சிபிஐயிடம் இல்லை என்று வாதிட்டனர். இதனிடையே ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருக்க விருப்பம் தெரிவித்ததால், செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.