பிறந்தநாள் அன்றும் திகார் சிறையில் இருப்பார் ப.சிதம்பரம்!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிஐ அதிகாரிகள். அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்ற காவலில் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி, ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (செப்டம்பர் 19 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் திகாரில் தனி அறையில் அடைக்கவும் நீதிபதி அஜய்குமார் உத்தரவு. இதற்கு முன்பாக ப.சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் சரணடைய தயாராக இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

former union minister p chidambaram court custody tihar jail judge ajay kumar

மேலும் சிறையில் மேற்கத்திய வசதியுடன் கூடிய கழிப்பறை நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். சிறையில் ப.சிதம்பரத்திற்கு இசட் பிரிவு பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் வழங்கவும் உத்தரவு. தனிக்கட்டில், மெத்தை, போர்வை உள்ளிட்ட வசதிகள் வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பு நீதிபதியிடம் கோரிக்கை. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் 74- வது பிறந்தநாள் செப்டம்பர் 16 ஆம் தேதி ஆகும்.

இருப்பினும் செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவல் உள்ளதால் பிறந்த நாள் அன்று ப.சிதம்பரம் சிறையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி வாதங்கள் முழுவதையும் நிராகரித்தார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FORMER UNION MINISTER India P chidambaram tihar jail
இதையும் படியுங்கள்
Subscribe