ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிஐ அதிகாரிகள். அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்ற காவலில் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி, ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (செப்டம்பர் 19 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மேலும் திகாரில் சிறையில்தனி அறையில் அடைக்கவும் உத்தரவு. மேலும் சிறையில் மேற்கத்திய வசதியுடன் கூடிய கழிப்பறை நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சிறையில் ப. சிதம்பரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள்கபில் சிபல், அபிஷேக் சிங்வி வாதங்கள் முழுவதையும் நிராகரித்தார்.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.