ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் வாதிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர், ப.சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து கடந்த நான்கு நாட்களாக ப. சிதம்பரத்தை விசாரணை செய்ததற்கான ஆவணங்கள் எங்கே என சிபிஐ-யிடம் கேள்வி எழுப்பினார்.

Advertisment

FORMER UNION MINISTER P CHIDAMBARAM CBI CUSTODY EXTEND IN DELHI COURT ORDER

இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், கடந்த 5 நாட்கள் ப. சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சிபிஐக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை 20 நிமிடத்திற்கு ஒத்திவைத்தார். அதன் பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, ப.சிதம்பரத்தை மேலும் 4 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை மதியம் 12.00 மணிவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment