ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ. கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை நாளை ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Advertisment

inx media

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, சிபிஐ வாகனத்தில் அழைத்து சென்றனர். இதற்கு முன்னதாக ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் ஆகியோர் உடனிருந்தனர்.

CBI

Advertisment

அதன் பிறகு டெல்லியில் ஜோர் பாக் இல்லத்திற்கு சென்றார் ப.சிதம்பரம். இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரின் இல்லத்திற்கு விரைந்தனர். அங்கு அவரிடம் அதிகாரிகள் நீண்ட நேர விசாரணை நடத்தினர். பிறகு ப. சிதம்பரத்தை பலத்த பாதுகாப்புடன் கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.