/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pa22.jpg)
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தும் வரும், கரோனா நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை மத்திய, மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அதிசயம் ஆனால் உண்மை. இவையெல்லாம் அரசு செய்யத் தவறியவை. நான்கு கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்கை மத்திய அரசு போடத் தவறியது. இரண்டு இந்திய கம்பெனிகள் ஒரு மாதத்தில் எத்தனை தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்று கணிக்கத் தவறியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/paaa444.jpg)
இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் தடுப்பூசி தயாரித்துத் தர மத்திய அரசு ஆர்டர் தந்த நாள் 11/01/2021. அவர்கள் தங்கள் முயற்சியில் தயாரித்திருந்தத் தடுப்பூசி இருப்பிலிருந்து தந்தார்கள். அவர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த ஊக்கமும் தரத் தவறியது.
இரண்டு கம்பெனிகளுமே மானியமோ முதலீடோ கடனோ எதிர்பார்த்தார்கள். தடுப்பூசி சப்ளைக்கு மத்திய அரசு முன்பணம் (அட்வான்ஸ்) தந்ததே அன்றி வேறு பணம் தரத் தவறியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கத் தவறியது. 29/03/2021 அன்று தான் தடை செய்யப்பட்டது. அதற்குள் 5.8 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chidambaram_25.jpg)
மூன்றாவது தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக்) 12/04/2021 அன்று தான் பயன்பாட்டு அனுமதி தரப்பட்டது. வேறு எந்தத் தடுப்பூசிக்கும் இதுவரை பயன்பாட்டு அனுமதி தரப்படவில்லை, இறக்குமதியும் ஆகவில்லை." இவ்வாறு அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)