கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தரப்பில் விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என வாதிட்டனர். இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Former Union Minister CBI corrupts Chidambaram within two hours

Advertisment

Advertisment

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், சி.பி,ஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்கு விரைந்தனர். ஆனால் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர். அதன் தொடர்ச்சியாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். அங்கு ப. சிதம்பரம் இல்லாததால் சிறிது நேரம் காத்திருப்புக்கு பின் புறப்பட்டனர்.

Former Union Minister CBI corrupts Chidambaram within two hours

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்கு சென்று வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அந்த நோட்டீஸில் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக ப. சிதம்பரத்திற்கு கெடு விதிக்கப்பட்டது. மேலும் இந்த நோட்டீசை சிபிஐ ப.சிதம்பரத்தின் மின்னஞ்சலுக்கும் அனுப்பியுள்ளது. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.