முன்னாள் மத்திய நிதி துறை அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி. பாஜக கட்சியின் மூத்த தலைவரான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் தீவிரஅரசியலில் இருந்து ஓய்வில் இருந்தார்.
அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதி. இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தனது அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம் பெற வேண்டுமென விரும்பினார். ஆனால் அருண் ஜெட்லி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.