/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rosa43333.jpg)
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், ஆந்திராவின் முன்னாள் மாநில முதலமைச்சருமான ரோசய்யா (வயது 88) இன்று (04/12/2021) காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஐதராபாத்தில் காலமானார்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை அதிமுகஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு ஆளுநராகப் பதவி வகித்தவர் ரோசய்யா. 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை ஆந்திர முதலமைச்சராகவும், 2014ஆம் ஆண்டு கர்நாடக பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்தார். தனது எளிமையால் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டப்பட்டவர்.
ரோசய்யா மறைவுக்குப் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)