Advertisment

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

Former Prime Minister Manmohan Singh admitted to hospital

Advertisment

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இன்று (26.12.2024) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சர்தார்புரா தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான அசோக் கெலாட் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து அறிந்ததும் கவலையடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தைப் பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் 14வது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக, இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Delhi congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe