முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும்,ஹாசன்மக்களவைத்தொகுதியின்எம்.பி.யுமானபிரஜ்வல்ரேவண்ணாபல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைபிரஜ்வல்ரேவண்ணாபாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும்பிரஜ்வல்ரேவண்ணாபல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார்குறித்துச்சிறப்புப்புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து,பிரஜ்வல்ரேவண்ணாவெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு2 வதுலுக்அவுட்நோட்டீஸ்கொடுக்கப்பட்டது. மேலும், வெளிநாடு தப்பிச் சென்றுள்ளபிரஜ்வல்ரேவண்ணாவைகைது செய்யசிபிஐப்ளூகார்னர்நோட்டீஸ்விடுக்கப்பட்டது. அதன்படி,பிரஜ்வல்ரேவண்ணாவைப்பிடிக்கபோலீசார்தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்,பிரஜ்வல்ரேவண்ணாஇந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தத் தருணத்தில் என்னால் ஒன்றுதான் செய்ய முடியும். நான்பிரஜ்வாலைகடுமையாக எச்சரித்து, எங்கிருந்தோ திரும்பி வந்து போலீசில் சரணடையச் சொல்லலாம். அவர் தன்னை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இது நான் விடுக்கும் முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை. இந்தஎச்சரிக்கைக்குச்செவிசாய்க்காவிட்டால், எனது கோபத்தையும், அவரது குடும்பத்தினர் அனைவரின் கோபத்தையும் அவர் சந்திக்க நேரிடும்.
அவருக்கு எதிரான விசாரணையில் என்னிடமிருந்தோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தோ எந்தவிதமான தலையீடும் இருக்காது என்பதை உறுதிசெய்வேன் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் மீதானகுற்றச்சாட்டுகளைச்சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆனால் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் இருப்பது அவர்மொத்தமாகத்தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும். என் மீது அவருக்கு மரியாதை இருந்தால், அவர் உடனடியாக திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.