/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/FEWGF3E_0.jpg)
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் (13.10.2021) மாலை காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மன்மோகன் சிங்கை பார்த்தனர்.
அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் "டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் உடல்நலத்திற்காகவும், அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரி, மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் தற்போது குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)