
இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த 19ஆம் தேதி கரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், தற்போது மன்மோகன் சிங் கரோனாவிலிருந்து மீண்டுள்ளார். இதனையடுத்து, அவர்மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். மன்மோகன் சிங் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்கனவே செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)