Skip to main content

பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் அளித்த ஐந்து பரிந்துரைகள்!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

modi manmohan singh

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா இரண்டாவது அலை, முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக, தினமும் இரண்டு லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசிகள் கேட்டும், படுக்கைகள் கேட்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தநிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

 

மன்மோகன் சிங் அக்கடிதத்தில், இந்தியா தற்போது அவசர நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், கரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து, அதற்கு ஐந்து பரிந்துரைகளை அளித்துள்ளார்.

 

மன்மோகன் சிங் அளித்துள்ள முதலாவது பரிந்துரை: மத்திய அரசு, அடுத்த ஆறு மாதங்களுக்கு எத்தனை தடுப்பூசிகளுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. அதில் எத்தனை தடுப்பூசிகளுக்கான ஆர்டர் ஏற்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பினால், அதற்குத் தேவையான தடுப்பூசி ஆர்டர்களை முன்கூட்டியே வழங்க வேண்டும். அதனால் தடுப்பூசி நிறுவனங்களால் ஒப்புக்கொண்டபடி, தடுப்பூசிகளை வழங்க முடியும். 

 

இரண்டாவது பரிந்துரை: தடுப்பூசிகள் எவ்வாறு மாநிலங்களுக்கு, வெளிப்படையான ஃபார்முலா மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். தடுப்பூசிகளில் 10 சதவீத தடுப்பூசிகளை அவரச தேவைக்காக வைத்துக்கொள்ளலாம். மற்றபடி மாநிலங்கள் தங்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் திட்டமிடும் வகையில், தடுப்பூசி இருப்பு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். 

 

மூன்றாவது பரிந்துரை: 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், சில பிரிவுகளை வகுக்க மாநிலங்களுக்கு தளர்வு வழங்கப்பட வேண்டும். உதாரணமாக ஆசிரியர்கள், பஸ், ஆட்டோ டிரைவர்கள், பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசி செலுத்த மாநிலங்கள் விரும்பலாம். அவர்கள் 45 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தாலும் தடுப்பூசி செலுத்தலாம். 

 

நான்காவது பரிந்துரை: கடந்த சில பத்தாண்டுகளில், இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளராக மாறியுள்ளது. இதற்கான திறன், தனியார் துறையில் பெருமளவில் உள்ளது. இந்தப் பொது சுகாதார அவரச நிலையில், தடுப்பூசி தயாரிப்பாளர்கள் அவர்களது தயாரிப்பு வசதிகளை வேகமாக அதிகரிக்க, மத்திய அரசு அவர்களுக்கு நிதியுதவி மற்றும் சலுகைகளை அளித்து ஆதரிக்க வேண்டும். சட்டத்திலுள்ள கட்டாய உரிமம் விதிமுறையைப் பயன்படுத்த இதுவே சரியான நேரம் என நம்புகிறேன். இதன்மூலம் நிறைய நிறுவனங்கள் உரிமத்தின் கீழ் தடுப்பூசியை தயாரிக்க முடியும். 

 

ஐந்தாவது பரிந்துரை: உள்நாட்டு தடுப்பூசி விநியோகம் குறைவான அளவில் உள்ளதால், நம்பிக்கையான வெளிநாட்டு மருந்து கட்டுப்பாட்டு ஆணையங்களால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை, உள்நாட்டில் சோதனையின்றி இந்தியாவில் அனுமதிக்க வேண்டும்.

 

இந்த ஐந்து பரிந்துரைகளை அளித்துள்ள மன்மோகன் சிங், சரியான கொள்கையை அமைப்பதன் மூலம், இன்னும் வேகமாகவும், மேலும் சிறப்பாகவும் செயல்பட முடியும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அரசு இந்தப் பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு அதன்படி செயலாற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.