இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 13ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவரது உடல்நிலையைத் தீவிரமாக கண்காணித்துவந்தனர்.
இந்தநிலையில், டெங்கு பாதிப்பிலிருந்து மீண்ட மன்மோகன் சிங், 18 நாட்களுக்குப் பிறகு நேற்று (31.10.2021) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.