முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96- வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வே துறை, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரும் வாஜ்பாயின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.

Advertisment