இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது பதவிக் காலத்துக்குப் பின் டெல்லி கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள அரசு இல்லம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 2004-ம் ஆண்டில் அங்கு குடியேறிய வாஜ்பாய், தனது மரணம் வரை (கடந்த ஆண்டு ஆகஸ்டு) அங்கேயே வசித்து வந்தார். அவரது இறப்புக்குப் பின் அவரது குடும்பத்தினர் கடந்த நவம்பர் மாதம் அந்த வீட்டை காலி செய்தனர். தற்போது அந்த வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

MODI GOVERNMENT

இந்த வீடு தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக கட்சியின் தேசிய தலைவருமான அமித்ஷாவிற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த இல்லம் ஒதுக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது எண்.11, அக்பர் ரோடு வீட்டில் வசித்து வரும் அமித்ஷா, சமீபத்தில் வாஜ்பாய் வாழ்ந்த வீட்டுக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் வீட்டில் சில மாற்றங்களை செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த வீடு அவருக்கு ஒதுக்கப்படுவது உறுதி எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.