முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95- வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்ற அமைச்சர்கள், பாஜகவின் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

former PM Atal Bihari Vajpayee on his birth anniversary DELHI 'Sadaiv Atal'  PM, PRESIDENT

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக்பவனில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 25 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று (25.12.2019) திறந்து வைக்க இருக்கிறார். அதேபோல் சக்கஜேரியாவில் வாஜ்பாய் பெயரில் ரூபாய் 50 கோடியில் அமையவுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் வருகையையொட்டி லக்னோ நகரம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Atal Bihari Vajpayee birth anniversary Delhi PM NARENDRA MODI president ram nath kovind
இதையும் படியுங்கள்
Subscribe