FORMER PARLIAMENT MEMBER CORONAVIRUS HOSPITAL INCIDENT

மஹாராஷ்ட்ரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஏக்நாத் கெய்க்வாட் (வயது 81), கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று காரணமாக, தென்மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று (28/04/2021) சிகிச்சை பலனின்றி காலமானார். அதைத் தொடர்ந்து, ஏக்நாத் கெய்க்வாட்டின் உடல் தாதர் சிவாஜி பார்க் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மறைந்த ஏக்நாத் கெய்க்வாட் 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை மாநில சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். மேலும், மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment