மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தவர்சியாமபிரசாத் முகர்ஜி. இந்த ஆண்டுநடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.
இந்தநிலையில், கடந்த ஆண்டுபிஷ்ணுபூர் நகராட்சித் தலைவராக சியாமபிரசாத் முகர்ஜி பதவி வகித்தபோது, அவர் ரூ. 9.91 கோடி அளவிற்குநிதி முறைகேடுகளில்ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகசியாமபிரசாத் முகர்ஜியிடம் மேற்கு வங்க காவல்துறை விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையில்சியாமபிரசாத் முகர்ஜிதிருப்திகரமான பதில்களை வழங்காததால், அவரைமேற்கு வங்ககாவல்துறை கைது செய்துள்ளது.