Skip to main content

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவு

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

Former Kerala Chief Minister Oommanchandy passed away

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

 

கேரளாவில் உள்ள கோட்டையம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ்  கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்று தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்