கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 102) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21.07.2025) உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அச்சுதானந்தன் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தார். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கட்சியின் பொலீட்பீரோ உறுப்பினராக இருந்தவர் ஆவார்.