Skip to main content

அயோத்தி இராமர் கோவிலுக்கு நிதி கேட்டு மிரட்டினர் -  கர்நாடக முன்னாள் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

kumaraswamy

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி. இவர் கடந்த திங்கட்கிழமை (15.02.2021), “அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலுக்கு நிதி திரட்டுபவர்கள், நிதி அளித்தவர்களின் வீடுகளையும், நிதி அளிக்காதவர்களின் வீடுகளையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி வருவதாக தெரிகிறது. இது, ஹிட்லர் ஆட்சியில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தபோது நாஜிக்கள் செய்ததைப் போல் உள்ளது,” எனத் தெரிவித்திருந்தார்.

இது சர்ச்சைக்குள்ளான நிலையில், இராமர் கோயிலுக்கு நிதி கேட்டு தான் மிரட்டப்பட்டதாகக் கூறி, குமாரசாமி தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், "இராமர் கோவிலுக்கு நிதியளிப்பது பற்றி எனக்கு கவலையில்லை. தேவைப்பட்டால் நானும் பங்களிப்பேன். ஆனால் உண்மையில் யார் தகவல் தருகிறார்கள்? பணம் சேகரிப்பதில் வெளிப்படைத்தன்மை எங்கே? பலர் மற்றவர்களை மிரட்டி பணம் வசூலித்து வருகிறார்கள். நானும் ஒரு பாதிக்கப்பட்டவன், ஒரு பெண் உட்பட 3 பேர் எனது வீட்டிற்கு வந்தனர். இது நாட்டின் முக்கியமான பிரச்சனை. நீ ஏன் பணம் கொடுக்கவில்லை என மிரட்டினர். அந்தப் பெண் யார்?. என்னிடம் பணம் கேட்பதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இராமர் கோயிலுக்கு நிதி கேட்டு மிரட்டப்பட்டதாக ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை காலம்... அயோத்தி ராமருக்கு பருத்தி ஆடை!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Cotton clothes for Ayodhya Ram

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ராமர் சிலைக்கு பருத்தி ஆடை அணிவிக்கப்படும் என ராம ஜென்மபூமி தீர்த்த  சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது. கோடை காலத்தையொட்டி அயோத்தி ராமர் சிலைக்கு இன்று முதல் பருத்தி ஆடை அணிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வண்ணம் பூசப்பட்ட கைகளால் நெய்த ஆடைகளை ராமருக்கு அணுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், கோடை காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.

Next Story

‘அயோத்தி ராமருக்கு ஒரு மணி நேரம் ரெஸ்ட்’ - அறக்கட்டளை அதிரடி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 Trust Management announced Ayodhi Ram needs an hour every day

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது, “ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12:30 முதல் 1:30 வரை மூடவுள்ளோம். அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.