
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள்ஒருவர்எச்.டி.தேவ கவுடா. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரானஇவர், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தியாவின் பிரதமராகவும் எச்.டி.தேவ கவுடா பதவி வகித்துள்ளார். இந்தநிலையில் இவருக்கும், இவரது மனைவிக்கும் கரோனாதொற்று உறுதியாகியுள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களோடு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக தங்களோடுதொடர்பில் இருந்தவர்கள் கரோனாபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர், தொண்டர்களும்நலன் விரும்பிகளும்அச்சப்பட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)