இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்ட 1,619 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில்முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்துஅவர் டெல்லியிலுள்ளஎய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.