/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SANJIVBHATT1.jpg)
குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டை காவலில் வைக்க குஜராத் நீதிமன்றம் உத்தரவு. 1998ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவரின் மீது போதைபொருள் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சம்மந்தபட்ட வழக்கறிஞர் பொய்யான ஆதாரங்கள் மூலம் இவ்வழக்கில் சிக்கப்பட்டுள்ளார் என்று பட்டை சிறை காவலில் வைக்க குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் சிஐடி, மேலும் இந்த வழக்கில் சம்மந்தபட்ட ஆறு பேரை சிறை காவலில் வைத்துள்ளனர். அதில் இரண்டு காவலர்களும் அடக்கம்.
சஞ்சீவ் பட், பிரதமர் மோடிக்கும் 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்கும் சம்மந்தம் உண்டு என்று சொன்னதால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி வேலையில் இருந்து தூக்கப்பட்டார். இதனையடுத்து பாஜக அரசை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)