Skip to main content

சத்யபால் மாலிக் உதவியாளர் வீட்டில் சிபிஐ சோதனை

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

former governor satyapal malik assistant house cbi enquiry
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் 

 

சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்தபோது அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

 

சமீபத்தில் சத்யபால் மாலிக், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மை காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்.

 

சாலை மார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனப் பேசியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மீண்டும் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அப்போது, சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காகத்தான் பழைய வழக்கில் மீண்டும் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது என்று பலரும் கூறினர். இருப்பினும் சத்யபால் மாலிக் கடந்த 28 ஆம் தேதி சிபிஐயிடம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். 

 

இந்நிலையில் நேற்று (17.05.2023) சத்யபால் மாலிக்கின் உதவியாராக இருந்த சுனக்பாலி என்பவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 11 இடங்களில் நடைபெற்றது. மேலும் ஜம்முவில் உள்ள சுனக்பாலின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆடிட்டர்களான சஞ்சய் நாரங், வீரேந்திர சிங் ராணா, கன்வர் சிங் ராணா, பிரியங்கா சௌத்ரி, அனிதா ஆகியோர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடைபெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பியுமான கெளதம் கம்பீர் அதிரடி அறிவிப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Former cricketer and BJP MP Gautam Gambhir action announcement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் இன்று (02-03-24) திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து, கவுதம் கம்பீர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் நான் கவனம் செலுத்துவதற்காக எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; நா.த.க.வுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Parliamentary elections The court barrage of questions for the Ntk

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே தேர்தல் ஆணையம் பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி இருந்தது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்பித் சிங் அரோரா அமர்வில் இன்று (01.03.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 6.7 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. எனவே இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அணுகினோம். ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கவில்லை. மேலும் கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்து கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

Parliamentary elections The court barrage of questions for the Ntk

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு லக்கி இல்லை போல. எனவே வேறு சின்னத்திற்கு மாறிவிட வேண்டியது தானே” எனக் கூறினர். மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதிடுகையில், “முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கர்நாடகாவில் உள்ள பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி கடந்த டிசம்பர் மாதமே கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்தது. அந்த அடிப்படையில் தான் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது” என வாதிடப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “தேர்தல் சின்னங்களை முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும். இதுதான் நடைமுறை. இதை எப்படி மாற்ற முடியும். ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக நடைமுறையை மாற்ற முடியுமா” என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.