tmc

Advertisment

மேற்குவங்கத்தில் இந்தாண்டுநடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை அறுதி பெரும்பான்மையோடு வென்ற மம்தா தலைமையிலானதிரிணாமூல்காங்கிரஸ் கட்சி, 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் விதமாகஎதிர்க்கட்சிகளைஒன்றிணைக்கும்பணிகளைச்செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும்திரிணாமூல்காங்கிரஸ், தனதுகிளையைப்பரப்பமுயற்சித்துவருகிறது. அந்த வகையில் பல்வேறு திரிபுரா அரசியல் தலைவர்களைதன் பக்கம் இழுத்ததிரிணாமூல்காங்கிரஸ், கோவாவிலும் தனதுஆட்டத்தைத்தொடங்கியுள்ளது. கோவாவின் முன்னாள் முதல்வரானலூய்சின்ஹோஃபலேரோவைதிரிணாமூல்காங்கிரஸ் தன்பக்கம் இழுத்துள்ளது. தற்போதுலூய்சின்ஹோஃபலேரோகாங்கிரஸிலிருந்துவிலகிதிரிணாமூல்காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மேலும் அவர் தனது சட்டமன்ற கட்சி உறுப்பினர்பதவியையையயும்ராஜினாமாசெய்துள்ளார்.

லூய்சின்ஹோஃபலேரோ, வடகிழக்கு மாநிலங்களுக்கான அகிலஇந்தியக்காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர். மேலும் அண்மையில் அவர், கோவா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தன்னுடையசிலஆதரவாளர்களோடுதிரிணாமூலில்இணைந்தலூய்சின்ஹோஃபலேரோபேசுகையில், இந்தியா கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது; பாஜகவையும் அதன் பிளவுபடுத்தும் கொள்கைகளையும், அதன் வெறுப்பு மற்றும் பழிவாங்கும் கலாச்சாரத்தையும் வீழ்த்தவேநான்திரிணாமூல்காங்கிரஸில் இணைவதற்கான முக்கிய நோக்கம்எனத்தெரிவித்துள்ளார்.