முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும்,பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர்சுஷ்மா சுவராஜ்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/susma mk.jpg)
அவர் தீடீர் மறைவினால் துயரத்தில் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow Us