அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1988- ஆம் ஆண்டு சாலையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரைக் கொலை செய்ததாக நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.