இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பை நீக்கியது மஹாராஷ்டிரா மாநில அரசு. மேலும் மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் ஏக்நாத் கட்செ, முன்னாள் உத்திரப்பிரதேச ஆளுநர் ராம் நாயிக் ஆகியோரின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்ய தாக்கரேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் காந்தியவாதி அன்னா ஹசாரேவின் பாதுகாப்பு ஒய் பிளஸ் பிரிவில் இருந்து இசட் பிரிவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.