/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramkadam-sjfhlebeeiiah_0.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மும்பையில் பெண்களை கடத்துவேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.எல்.ஏவுக்கு கண்டனங்கள் வலுத்துவருகிறது. இந்நிலையில் அந்த பாஜக எம்.எல்.ஏவின் நாக்கை அறுத்து வந்தால் 5 லட்சம் என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.
மும்பை கட்கோபரில் உறியடிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் இளைஞர்கள் மத்தியில் பேசுகையில், ''இளைஞர்களே உங்களை பெண்கள் காதலிக்கவில்லை என்று சொன்னால் என்னிடம் சொல்லுங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை நான் கடத்திவந்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எனக்கூறி என்னுடையா மொபைல் நம்பரை குறித்துக்கொள்ளுங்கள் எனவும் கூறி நம்பரை கொடுத்துள்ளார். பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்த மும்பையில் பல இடங்களில் பாஜக எம்.எல்.ஏவின் இந்த செயலை கண்டித்துபோராட்டங்கள் நடத்தப்பட்டது.
அதேபோல் மாநில மகளீர் ஆணையம் 8 நாளில் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனக்கூறி அவருக்குநோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில் தேசிய மகளீர் ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தலைமை அவரை மாநில செய்தி தொடர்பாளர் பதிவிலிருந்து நீக்கியுள்ளது மேலும்பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க கூடாது எனவும் அறிவுரை கூறியுள்ளது பாஜக தலைமை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201809071045248535_Chop-off-BJP-MLA-Ram-Kadams-tongue-will-give-Rs-5-lakh_SECVPF.gif)
காங்கிரஸ் தரப்பும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துவருகிற நிலையில்காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுபோத் சாவ்ஜி கூறுகையில்,ஒரு எம்.எல்.ஏவிடம் இருந்துஇதுபோன்ற கருத்துக்கள் வருவது ஏற்கத்தக்கதல்ல எனவேபாஜக அவரின்நாக்கை அறுத்து வந்தால் 5 லட்சம் பரிசுஎன கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)