Skip to main content

"முதலமைச்சர் தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதில் குறியாக உள்ளார்" - நாராயணசாமி 

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

former cm narayanasamy talks about rangasamay statement 

 

புதுச்சேரியில் நேற்று முன்தினம் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அலுவலக அறைகளுக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நீதித் துறையினர் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என பேசி இருந்தார்.

 

இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "புதுச்சேரி மாநில நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறைகள் கட்ட சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அடிக்கல் நாட்டிய விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சரும் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில அந்தஸ்து பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியது புரியாத புதிராக உள்ளது. நீதிபதிகளிடம் இந்த கோரிக்கை வைத்திருக்க கூடாது. யாரிடம் என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என தெரியாமல் முதலமைச்சர் தள்ளாடுகிறார்.

 

மாநில அந்தஸ்து கோரி மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைக்கிறார். ஆனால் அதன் பின் பா.ஜ.க தலைவர் சாமிநாதன் மாநில அந்தஸ்து தேவையில்லை என கூறுகிறார். மாநில அந்தஸ்து கிடைக்கிறதோ இல்லையோ தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதில் முதலமைச்சர் ரங்கசாமி குறியாக உள்ளார். மாநில அந்தஸ்து தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரை சந்தித்தாரா?, புதுச்சேரி மக்களை என்.ஆர்.காங்கிரஸ் அரசும், பா.ஜ.கவும் ஏமாற்றுகின்றன. உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் முறை கூடாது என சட்டத்துறை அமைச்சர் கிரண் பொய்யான தகவலை கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில்  அதைப்பற்றி வெளியில் பேச கூடாது. ஆனால் மத்திய அரசு மத்திய அமைச்சர்கள் மூலம் பேசி வருவதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்" என்றும் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பக்ரீத் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Bakrit festival; Greetings leaders

பக்ரீத் பண்டிகை நாளை (17.06.2024) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், “பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இசுலாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம் நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இது போன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி, நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன. பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்தப் புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி. அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், அன்பு ஆகியவற்றைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும். 

Bakrit festival; Greetings leaders

இந்திய அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கியிருக்கிற உரிமைகளை பறிக்கிற வகையில் 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டு வந்தது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பாதுகாவலனாக காங்கிரஸ் பேரியக்கமும், தலைவர் ராகுல்காந்தி அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும்  இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். 

Bakrit festival; Greetings leaders

இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு; பொதுமக்கள் சாலை மறியல்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
puducherry redyarpalayam incident Public road blocks

புதுச்சேரியில் உள்ள  ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்ற மகளும் வீட்டுக்குள்ளேயே மயங்கி விழுந்திருக்கிறார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. காரணமே தெரியாமல் இருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பாக்கியலட்சுமி (15) வயது சிறுமி, செந்தாமரை (72) அவருடைய மகள் காமாட்சி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கழிவறை வழியாக வீட்டுக்குள் புகுந்ததாக முதலில் தகவல் வெளியானது. விஷவாயுவின் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் குவிந்தனர். 

puducherry redyarpalayam incident Public road blocks

இதன் தொடர்ச்சியாக அங்கு ஆய்வு நடைபெற்ற நிலையில் பாதாளச் சாக்கடையில் விஷவாயு கசிவு இல்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார். வீட்டுக்குள் வேறு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியின் குடும்பத்தாருக்கு 30 லட்சம் நிதியுதவியும், மற்ற பெண்களான செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.

அதே சமயம் இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக வீடுகளில் உணவு சமைக்கத் தடை விதிக்கப்பட்டது. எனவே அப்பகுதியில் அரசு சார்பில் வீடு வீடாகச் சென்று உணவு விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்றது. அதோடு வீட்டுக் கழிவறைகளுக்குத் தவறாக இணைப்பு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த கோரி கோரி அப்பகுதி மக்கள் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

puducherry redyarpalayam incident Public road blocks

அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அலட்சியமாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த மூவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கழிவுகளை வெளியேற்ற புதிய பைப் லைன் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.