கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமைக்கோரி தற்போது அவர் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

former chief minister kumarasamy Disclaimer

Advertisment

இந்நிலையில் குமாரசாமியின்மஜக, பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்க போவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதற்கு தற்போது முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி அளித்துள்ள விளக்கமாவது,

பாஜகவிற்கு நான் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. மஜக எம்.எல்ஏக்கள், கட்சி தொண்டர்கள் இதுபோன்ற வதந்திகளுக்கு செவிசாய்க்கத் தேவையில்லை.பாஜகவுக்கு ஆதரவு என்ற தகவல் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் கட்சியை வலுபடுத்துவோம். சாமானிய மக்களுக்கான நமதுபோராட்டம் தொடரும். என் தொண்டர்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான் எனக்கூறியுள்ளார்.

Advertisment