Skip to main content

ரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

 

 former chief justice RanjanGogoi- rajya sabha mp

 

 

அயோத்தி பிரச்சினையில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 09 நவம்பர் 2019 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நில வழக்கு முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ - ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

One country one election Ram Nath Kovind meeting

 

பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமித்து அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

 

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 23) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள ஜோத்பூர் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை! 

Published on 24/07/2022 | Edited on 24/07/2022

 

President Ram Nath Kovind's speech to the nation!

 

தனது பதவிக்காலம் இன்றுடன் (24/07/2022) நிறைவடையும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைக்காட்சி வாயிலாக இன்று (24/07/2022) இரவு 07.00 மணிக்கு உரையாற்றினார். 

 

அப்போது குடியரசுத் தலைவர் கூறியதாவது, "உங்களிடம் சில விஷயங்களை பேச விரும்புகிறேன். நாடு முழுவதும் செய்த பயணத்தால், மக்களிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. நாட்டு மக்கள் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு அளித்தீர்கள். மக்கள் பிரதிநிதிகள் மூலம் என்னை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள். அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

சாதாரண குடும்பத்தில் பிறந்த தனக்கு நாட்டிற்கு சேவைப்புரிய வாய்ப்பு கிடைத்தது ஜனநாயகத்தின் சிறப்பு. இளைஞர்கள் தங்களின் கிராமங்கள், பயின்ற பள்ளிகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு சிறப்பானது. எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். 

 

21- ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். குடிமக்களே இந்த நாட்டின் உண்மையான தூண்" எனத் தெரிவித்தார்.