முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் (வயது 87) காலமானார்.
இவர் 1955 ஆம்ஆண்டு தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1990- 96 ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணிபுரிந்தார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.என்.சேஷன் காலமானார். இவரின் மறைவுக்குமத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டி.என் சேஷன் மறைவு வருத்தமளிக்கிறது.தேர்தல் சீர்திருத்தங்களுக்குடி.என்.சேஷன் அளித்த பங்களிப்பு வருங்காலங்களில் வழிகாட்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.