Foreign woman passed away in Delhi

Advertisment

டெல்லியில் சித்திரவதை செய்யப்பட்டு வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி திலக் நகர் பகுதியில் உடலில் சித்திரவதை செய்த அடையாளங்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற டெல்லி போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, கண்கள் பிதுங்கிய நிலையிலும், உடலில் தீயால் சுட்ட காயங்களும், இருந்துள்ளன. மேலும் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதற்கான தடையங்களும் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவைஆராய்ந்து பார்த்துள்ளனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக குர்பிரீத் என்ற நபரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்த பெண் சுவிட்சர்லாந்தைச்சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், குர்பிரீத் சுவிட்சர்லாந்தில் வைத்துச் சந்தித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று, அவருடைய கை, கால்களைக் கட்டிப் போட்டு கொலை செய்து பழைய கார் ஒன்றில் வைத்திருக்கிறார். நாளடைவில் உடலிலிருந்து துர்நாற்றம் வெளிவரவே, சாலையோரம் உடலை வீசிவிட்டுத் தப்பித்துச் சென்றிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கும், குர்பீரித்திற்கும் என்ன தொடர்பு என்றும், ஏன் அவரை கொடூரமாகக் கொன்றார் என்பது குறித்தும் காவல்துறையினர்அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்பதும் தெரியவரும் என போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.