தில்லி விமான நிலையத்தில் நூதன முறையில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் உள்ள இந்திரா காந்திவிமான நிலையத்தில் நேற்று விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கை மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதனால் அந்த நபரை தனியாக கொண்டு சென்ற அதிகாரிகள், அவரை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அவர் கிலோ கணக்கில் வேர்க்கடலை கொண்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Advertisment

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், அந்த வேர்க்கடலைகளை உடைத்து சோதனை செய்தனர். அப்போது அதில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் சுருட்டி மடக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரூபாய்களின் மதிப்பு பல லட்சங்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் அவர் பிஸ்கெட் பாக்கெட்டுகளில் மறைத்து எடுத்துவந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு மட்டும் 45 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் தில்லி விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.