Advertisment

பிப்ரவரி மாதமே மோடிக்கு வாழ்த்து கூறிய இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர்...

மக்களவை தேர்தலின் மாபெரும் வெற்றிக்கு பிறகு குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைப்பெற்ற பிரம்மாண்ட பதவி ஏற்பு விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், நரேந்திர மோடிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பாஜகவின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கேபினட் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

Advertisment

foreign ambassador wishes modi

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்த கஜகஸ்தான் நாட்டு தூதர் மோடிக்கு கடந்த பிப்ரவரி மாதமே நான் வாழ்த்து கூறினேன் என செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது பேசிய அவர், "நான் கடந்த பிப்ரவரி மாதமே மோடிக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன். எங்கள் நாட்டின் அதிபர் சார்பில் அவருக்கு வாழ்த்து சொன்னேன். நீங்கள் மீண்டும் பிரதமரானதும் உங்களை சந்திப்பேன் என்றேன். அது நடந்துள்ளது. மோடி மீண்டும் பிரதமராகியுள்ளது இந்தியாவுக்கு ஒரு நல்ல அறிகுறி. பிரதமர் மோடி நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார். கடந்த முறை அவர் செய்ய முடியாத திட்டங்களை இந்த முறை செய்து முடிப்பார்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

modi loksabha election2019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe