Advertisment

“தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் என்பது பொய்யான தகவல்” - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

publive-image

Advertisment

மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், கட்டாய மதமாற்றங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடைசட்டவரைவை உருவாக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தி இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடைசட்டத்தை கொண்டு வரக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறப்படுவது பொய்யான தகவல்; கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை.

அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்கள் மதத்தை பரப்புவதில் எந்த தவறும் இல்லை. மதத்தை பரப்ப சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. எனவே மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu supremecourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe