Advertisment

மருத்துவமனை வெளியேற்றியதால் பிறந்தவுடன் இறந்த குழந்தை

மத்திய பிரதேசத்தில் டின்டோரி மாவட்டத்தில் மருத்துவ நிர்வாகம் பிரசவம் பார்க்கமறுத்ததால் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisment

சமராவதி தேவி(24) எட்டு மாத கர்ப்பிணி. இவருக்கு கடந்த திங்கள் காலை மூன்று மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதால்உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். . வலி அதிகமானதால் அங்கிருந்த செவிலியர்களிடம் தனக்கு பிரசவ வலி தாங்க முடியவில்லை, பிரசவம் பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் இவரை கண்டுகொள்ளாததால் கோபமடைந்தவர் வலி தாங்கமுடியாமல் அவர்களை அறைந்துள்ளார்.

 forced   leave the hospital

இதனால் கோபமடைந்த செவிலியர்கள் அவரையும் உறவினரையும்வலுக்கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளனர் . வீட்டிற்கு போகும் வழியில் மீண்டும் பிரசவ வலி எடுக்க ஓரிடத்தில் அமர்ந்து வலிபொறுக்காமல் கதறியுள்ளார். அவரின் உறவினர்கள் அங்குள்ள பெண்களின் உதவியை நாடியுள்ளனர்.உதவிக்கு வந்தபெண்கள் திறந்தவெளியில் சுற்றிலும் புடவையை வைத்து மறைத்துக்கொண்டுபின்அவர்களே பிரசவம் பார்த்தனர்.

Advertisment

 forced   leave the hospital

சமராவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது, இதில் பரிதாபமான செய்தி என்னவென்றால் அந்த ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அதைப்பார்த்து தன் பிள்ளையை கையில் வைத்துக்கொண்டு கதறி அழுதார். சமராவதி இது குறித்து கூறியது."எனக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் என் உறவினர்கள் என்னை மருத்தவமனையில் சேர்த்தனர். அப்போது எனக்கு வலி அதிகமாக இருந்தது எனவே எனக்குஉடனடியாகபிரசவம் பார்க்கும்படி கூறினேன். ஆனால் என்னுடைய வலியைசெவிலியர்கள் புரிந்துகொள்ளாமல் என்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர். அதனால்தான் தற்போது என் குழந்தை இறந்துவிட்டது" என்று கூறினார்.

hospital MadhyaPradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe