காவல் நிலையத்திற்கு வலுகட்டாயமாக அழைத்ததால் மாடல் அழகி தனது உடையை கலைந்து போலிஸாரை கோபத்துடன் மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/model 1.jpg)
கடந்த வாரம் மும்பையிலுள்ள டோனி லோக்கண்ட்வாலா என்னும் விடுதியில் இருக்கும் மாடல் அழகி ஒருவர், அந்த விடுதியின் பாதுகாவலரை சிகரெட் வாங்கி வர சொல்லியுள்ளார். பாதுகாவலர் வாங்கி வர மறுத்ததால், ஆத்திரத்தில் மாடல் அழகி பாதுகாவலரை அரைந்துள்ளார். இதனால் பாதுகாவலர் போலிஸை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அந்த மாடல் அழகியை காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். வர மறுத்ததால் வலுக்கட்டாயமாக போலிஸார் அழைத்துள்ளனர். ஆனால், மாடல் ஆழகியோ தன்னை அழைத்துபோக பெண் போலிஸ் இல்லை என்பதால் காவல் நிலையத்தில் வந்து காலை புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் போலிஸ் தரப்பில் இப்போதே வந்து புகார் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து கோபமான அந்த மாடல் அழகி தனது உடையை கலைந்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)