Advertisment

ஜெய் ராம் என கோஷமிடுமாறு தாக்குதல் - திஹார் சிறை கைதி நீதிமன்றத்தில் புகார்!

tihar jail

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில்இருந்த குழுவில் இருந்ததாகவும், டெல்லியில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர்ரஷீத் ஜாபர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகாமையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

இந்தநிலையில் ரஷீத் ஜாபரின் வழக்கறிஞர், சிறையில் சக கைதிகள் அவரை அடித்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிடுமாறு துன்புறுத்தியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.ரஷீத் ஜாபர் தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசியபோது தான் தாக்கப்பட்டதை அவரிடம் கூறியதாகவழக்கறிஞர் கூறியுள்ளார்.

Advertisment

மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க சிறை கண்காணிப்பாளருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்குமாறு ரஷீத் ஜாபரின் வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். கைதி ஒருவர், சிறைச்சாலைக்குள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்புமாறுகூறி தான் தாக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

delhi high court isis tihar jail
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe