உலக அளவில் அதிக ஊதியம் பெறும் பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் (FORBES) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ஆண்டுக்கு ஆயிரத்து 265 கோடி ஊதியம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிக ஊதியம் பெறும் 100 பிரபலங்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். இந்திய பாலிவுட்டில் முன்னணி நடிகரான அக்க்ஷய் குமார் இடம் பிடித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இவர் ஆண்டுக்கு 444 கோடி ரூபாய் ஊதியம் பெறுவதாகவும், ஒவ்வொரு படத்துக்கும் சுமார் 30 கோடி முதல் 70 கோடி ரூபாய் வரை ஊதியம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், 277 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்துடன், 76- வது இடத்தில் இருந்த அக்க்ஷய் குமார்,இந்த ஆண்டு 33- வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.