ADVERTISEMENT

விஷமான உணவு : மூன்று குழந்தைகள் பலி; 250 பேர் கவலைக்கிடம்!

12:45 PM Jun 19, 2018 | Anonymous (not verified)

இரவு விருந்தில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலம் காலாபூர் பகுதியில் சுபாஷ் மானே என்பவரால் புதிதாக கட்டப்பட்ட வீட்டில், நேற்றிரவு புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவின் போது இரவு விருந்திற்காக ஐந்நூறு பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது.

விருந்தில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட குழந்தைகள் சிலர் குமட்டல், வயிற்று வலி மற்றும் மயக்கமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து பெரியவர்களும் அதே அறிகுறியை உணர்ந்த நிலையில், அவர்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் வழியில் பிரகதி ஷிண்டே, ரிஷிகேஷ் ஷிண்டே மற்றும் கல்யாணி ஷிங்கோட் ஆகிய குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 250க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக நாவி மும்பை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் இதற்கு ‘ஃபுட் பாய்சன்’ காரணமாக இருக்கலாம் என எண்ணிய நிலையில், உணவை சோதித்துப் பார்த்ததில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகளவு கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. யார் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT