மிஷன் ககன்யான் எனும் இஸ்ரோவின் திட்டத்தின்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த சுகன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் எடுத்துச்செல்ல உள்ள உணவு பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

food list for astronauts of mission suganyan

Advertisment

Advertisment

அதன்படி விண்வெளிக்குச் செல்ல திட்டமிடப்பட்ட இந்திய விண்வெளி வீரர்களுக்கு, முட்டை ரோல், வெஜ் ரோல், உப்மா, இட்லி, பாசிப்பயிறு அல்வா மற்றும் வெஜ் புலாவ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொடுத்தனுப்பப்பட உள்ளன. மைசூர் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட உள்ள இந்த உணவு பொருட்களுடன் அவர்களுக்கு உணவு ஹீட்டர்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் நீர் மற்றும் பழச்சாறுகள் உள்ளிட்ட திரவங்களை விண்வெளி வீரர்கள் உட்கொள்ள உதவும் வகையிலான சிறப்பு கொள்கலன்களும் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.