சாலை முதல் விமான நிலையங்கள் வரை குத்தகை - புதிய திட்டத்தை தொடங்கிவைத்த மத்திய நிதியமைச்சர்!

nirmala sitharaman

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று (23.08.2021) தேசிய பணமாக்கல் (national monetisation pipeline) திட்டத்தைமுறைப்படி ஆரம்பித்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் குறைவாகப் பயன்படுத்தப்படும் அரசு சொத்துகள், குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றைக் குத்தகைக்கு விடுவதும் அடங்கும்.

அரசு சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவதன்மூலம், நெடுஞ்சாலைத்துறையிலிருந்து 1.6 லட்சம் கோடியையும், ரயில்வே துறையிலிருந்து 1.5 லட்சம் கோடியையும், மின் துறையிலிருந்து 79,000 கோடியையும் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், விமான நிலையங்களிலிருந்து20,800 கோடியையும், துறைமுகங்களில் இருந்து 13,000 கோடியையும், தொலைத்தொடர்பு துறையிலிருந்து 35,000 கோடியையும், ஸ்டேடியங்களில் இருந்து 11,500 கோடியையும், மின்சக்தி பரிமாற்றத் துறைகளிலிருந்து 45,200 கோடியையும் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அரசு சொத்துக்களைக் குத்தகைக்கு விட்டு திரட்டப்படும் 6 லட்சம் கோடியை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு பயன்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

national monetisation pipeline Nirmala Sitharaman
இதையும் படியுங்கள்
Subscribe